கணிப்பை மீறி சென்னையில் மீண்டும் கனமழை; அடுத்த என்ன நடக்கும்?

 
சென்னை மழை

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த இரு வாரமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. தற்போது சில நாட்களாக மழை ஓய்ந்துள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இச்சூழலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவி வருகிறது.

அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை! | nakkheeran

இந்தச் சுழற்சி தமிழக கடலோரப் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

சென்னையில் டமால் டுமீல் மழை.. குளிர்ந்த காற்றுடன் கனமழை.. எல்லாம்  புரேவியால்தான்! | Heavy Rain lashes in Chennai - Tamil Oneindia

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டது. ஆனால் கணிப்பை மீறி காலை முதல் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  மயிலாப்பூர், வளசரவாக்கம், போருர், ராமாபுரம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தற்போது சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரம் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.