கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. அடுத்தடுத்து தமிழகத்திற்கு மஞ்சள், ஆரஞ்சு எச்சரிக்கை..

 
மழை


தமிழ்நாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு  மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.  அதற்கேற்ப தமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஆக - 12, 13ல்) கனமழை பெய்யும் எனவும் ,   7 - 11 செமீ அளவுக்கு மழை  பெய்ய வாய்ப்பு என்பதால்  மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது 

rain

தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆக - 14, 15 ஆகிய  2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த இரு நாட்களிலும் 12 - 20 செமீ மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல்  அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.