கனமழை எச்சரிக்கை- புதுவையில் கடற்கரைக்கு செல்ல தடை
புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடற்கரைச்சாலைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடந்தசில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.
புதுச்சேரியில் நேற்று மாலை முதல் பெய்த கனமழை இரவு முதல் தீவிரம் குறைந்தது. மழை தணிந்து சாரலாக உள்ளதால் பல இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. புதுச்சேரி கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகளவில் இருந்தது. அதி உயரத்துக்கு அலைகள் பல இடங்களில் எழத்தொடங்கியது. கடற்கரை சீற்றம் அதிகளவில் இருப்பதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியத்தொடங்கினர். பலரும் வேடிக்கை பார்க்கவும், அலையில் காலை நனைக்கவும் வந்தனர்.
இதையடுத்து போலீஸார் கடற்கரை சாலையில் பார்வையாளர்களையும், சுற்றுலா பயணிகளையும் அனுமதிப்பதை தவிர்த்தனர். கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது. மீனவர்கள் யாரும் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை