வெளுத்து வாங்கும் கனமழை : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை தெரியுமா?

 
school leave

கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rain
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினாலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று தெற்கு ஆந்திரா வடதமிழகம் கடற்கரை நோக்கி நகரக் கூடும் என்பதாலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனால் தமிழகத்திற்கு  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை திருவல்லிக்கேணி, அண்ணா நகர், மயிலாப்பூர் ,பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை ,ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், , அண்ணா நகர் ,கோடம்பாக்கம் ,அசோக் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று பிற்பகல் தொடங்கிய மழை தற்போது வரை நீட்டித்து வருகிறது. இந்நிலையில் சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் ,மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர் ,திண்டுக்கல், தேனி, தர்மபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

schools

அதேபோல் செங்கல்பட்டு, திருவண்ணாமலை ,சேலம் ,திருநெல்வேலி, தூத்துக்குடி ,திருச்சி ,கிருஷ்ணகிரி, புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர் ,திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.