ராசிபுரத்தில் அரை மணி நேரம் கொட்டித் தீர்த்த அடைமழை
ராசிபுரத்தில் சுமார் அரை மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்து நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாலை ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, மங்களபுரம், வடுகம், சிரப்பள்ளி, வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக ராசிபுரம் ஒரு வழி பாதையில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். மேலும் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

இதேபோல் புதிய பஸ் நிலையம் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் கழிவுநீருடன் வளநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தால் மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர் . ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் ராசிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் கழிவு நீருடன் மழைநீர் கலந்து தாழ்வான பகுதிகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராசிபுரத்தில் சுமார் அரை மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்து நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.


