குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

 

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

குளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி உயிரிழந்தார். இதையடுத்து திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு சிறுமி பத்து ரூபாய் குளிர்பானம் அருந்தியதில் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

மீண்டும் சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. சென்னை வண்ணாரப் பேட்டையில் இரண்டு சிறுவர்கள் பத்து ரூபாய் குளிர்பானம் வாங்கிக் குடித்ததும் மயக்கம் வந்து ரத்த வாந்தி எடுத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கரூரில் குளிர்பானம் குடித்த 2 சிறுவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கரூர் சின்ன ஆண்டான்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் கணேஷ்(13), மகள் தரணி(9). இருவரும் நேற்று இரவு ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அப்போது பிரபல நிறுவனத்தின் குளிர்பானங்களை அருந்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று காலையில் சிறுமி தரணிக்கு வாந்தி ஏற்பட்டிருக்கிறது .அச்சமடைந்த இளங்கோ தனது மகன் கணேஷ் மற்றும் மகள் தரணியை தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

காலாவதியான குளிர்பானங்களை வாங்கி வந்து விற்றுள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எழுந்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிறுமி அருந்திய குளிர்பான விற்பனை செய்த கடையில் சென்று குளிர்பானங்களை ஆய்வு செய்தனர். சிறுமியை அருந்திய பிரபல தனியார் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் கடந்த ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்திருக்கிறது. தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒன்பது மாதங்கள் பயன்படுத்தலாம் என்று குளிர்பான நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆனால் அதற்கு மேலும் காலாவதியாகி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்து இருக்கிறது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.