"எல்லாம் பொய் நம்பாதீங்க"... பாலியல் புகார் குறித்து ஹர்ஷா சாய் விளக்கம்!

 
harsha sai

"எல்லாம் பொய் நம்பாதீங்க" என பாலியல் புகார் குறித்து ஹர்ஷா சாய் விளக்கம் அளித்துள்ளார்.


சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இளம்பெண் ஒருவர் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அந்த பெண்னின் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். புகாரில், தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஹர்ஷா சாய் தன்னிடம் இருந்து இரண்டு கோடி பணம்  பெற்றுக்கொண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டதாக இளம்பெண் குற்றம் சாட்டினார். இதையடுத்து ஹர்ஷா சாய் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஹர்ஷா சாய் விளக்கம் அளித்துள்ளார். அதில்,  “எல்லாம் பொய் நம்பாதீங்க... பணம் பறிப்பதற்காக என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அளித்துள்ளனர். என்னை பற்றி உங்களுக்கு தெரியும். உண்மை விரைவில் வெளிவரும். மேற்கொண்டு விவரங்களை எனது வழக்கறிஞர் தெரிவிப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.