அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் மாஸ்டர் குளித்து கொண்டிருக்கும்போதே மரணம்

 
ஸ்

சேலத்தில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் , உடற்பயிற்சி கூடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற மகாதீர் முகமது(35) / இவர் 31 -து வார்டு திமுக முன்னாள் செயலாளர். இவர் ஆற்றோர  வடக்கு தெருவில் சொந்தமாக உடற்பயிற்சி நிலையம் வைத்துள்ளார்.  தினமும் அவருடைய ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது வழக்கம்.  இதேபோல நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஜிம்மிற்கு சென்று உடற் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் . இரவு 8 மணி அளவில் ஜிம்முக்கு வந்த அனைவரும் உடற்பயிற்சி முடித்துக் கொண்டு சென்று விட்டனர். ஆனால்  இவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர்  ஜிம்மில் உள்ள குளியல்  குளித்த நிலையில், வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.  இதனால் அவருடைய கார் டிரைவர் முஸ்தபா, ஜிம்முக்குள் சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு  இல்லாததால், குளியலறைக்கு சென்று பார்த்த போது,  அங்கு உள்புறமாக தாழிடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனால் குளித்துக் கொண்டு இருப்பார் என்று நினைத்து சிறிது நேரம் காத்திருந்த கார் டிரைவர், நீண்ட நேரம் ஆகியும் எவ்வித சத்தமும் கேட்காததால்,  சந்தேகம் அடைந்த முஸ்தபா குளியலறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காதில் ரத்தம் வழிந்த நிலையில் சேட்டு மூச்சுப் பேச்சு இல்லாமல் அசைவற்று தரையில் கிடந்துள்ளார்.  உடனே அருகில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு,  சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சேர்த்தனர். அப்போது மருத்துவர் பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார்,  உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பார்வையிட்டு,  அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது,  அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் , பின்னர் நீராவியில் குளித்துள்ளார்.  இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடற்பயிற்சி கூடத்தில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.