அமைந்தகரையில் திடீரென உள்வாங்கிய தரை தளம்
Oct 15, 2024, 18:02 IST1728995579141
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் கனமழை காரணமாக அண்ணா மருத்துவமனை முன்பு மழைநீர் தேங்கியுள்ளது. சிகிச்சைக்காக செல்லும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் மருத்துவமனை முன்பு தேங்கியுள்ள மழை நீரை அகற்ற பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.