பிட் காயினுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு

 
bitcoin

சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சிகளின் மீதான மோகம் அதிகரித்துவருகிறது. ஆனால் இது நம்பகமான ஒரு முதலீடாக இல்லை எனக் கூறப்படுகிறது. கிரிப்டோகரன்சி மீதான தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், கிரிப்டோகரன்சிகள் வர்த்தகமானது அதிகரித்துள்ளது. ஆனால் கிரிப்டோகரன்சிகள் குறித்தான சட்டம் குறித்து மத்திய அரசு இயற்றவில்லை.

மத்திய அரசு ஆலோசனை

இதனிடையே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிட்காயின் மதிப்பானது 131% ஏற்றம் கண்டுள்ளது. தனியார் பிட் காயினுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, மேலும் ரிசர்வ் வங்கி சார்பில், டிஜிட்டல் கரன்சி வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டதொடரில்,  'கிரிப்டோகரன்சி மற்றும் ஒழுங்குமுறை டிஜிட்டல் நாணய மசோதா, 2021' ஐ அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரிசர்வ் வங்கியால், வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான எளிதான கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாஸ்காம், ஐஏஎம்ஏஐ மற்றும் இந்தியாடெக் போன்ற பல தொழில் அமைப்புகளும், நாட்டில் உள்ள கிரிப்டோ-பரிமாற்றங்களும் கிரிப்டோ தயாரிப்புகளை தடை செய்யக்கூடாது, ஆனால் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றன.