தமிழ்நாடு குழந்தைகளுக்கான கொள்கை 2021-ஐ வெளியிட்டது தமிழக அரசு!

 
stalin

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில்,  தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021ஐ வெளியிட்டார். 

ttn

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும்,  அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெறவும்,  குழந்தைகளின் உரிமைகள் எந்தவித தடையுமின்றி கிடைக்கப் பெறுவது உறுதி செய்யவும்,  மாநில அளவில் குழந்தைகளுக்கான கொள்கையை வடிவமைத்தல் இன்றியமையாதது ஆகும். இதனை கருத்தில் கொண்டு அவர்களின் வளர்ச்சி பணிகள் நிலைகளுக்கான இலக்கினை அடைந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி ,மருத்துவம் ,பாலியல் பாகுபாடு ,பாதுகாப்பு இவை அனைத்திற்குமான தனித்துவம் வாய்ந்த கொள்கையான தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தை பாதுகாப்பில் தீவிரம் காட்டும் திமுக அரசு “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியீடு!

பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கவும் , குழந்தைகளை பாதுகாக்கவும், போக்சோ சட்டத்தின்கீழ் அனைத்து பள்ளிகளிலும் புகார் குழு அமைக்கப்படும்,  குழந்தைகளை பாதுகாப்பதற்கு என்றே பிரத்தியேகமாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைப்பை உருவாக்கி செயல்படுத்தப்படும், அனைத்துக் குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை உறுதியாகக் கடைபிடிக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும், குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குறைதீர் அமைப்புகள் மேம்படுத்தப்படும் உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.