கனமழை எச்சரிக்கை- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆரம்பத்திலேயே காற்றழுத்த தாழ்வு நிலையுடன் மிரட்ட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்து எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.. மீனவர்கள் மீன்பிடிக்க 17ம் தேதி வரையில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடல் பகுதியில் மணிக்கு 55லிருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கையால் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய துறைகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கவும் வீட்டிலிருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.