7.5% உள்ஒதுக்கீடுக்கு விரைந்து ஒப்புதல் தர ஆளுநர் சம்மதம்!

 

7.5% உள்ஒதுக்கீடுக்கு விரைந்து ஒப்புதல் தர ஆளுநர் சம்மதம்!

மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு தர ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தேர்வு முடிவுகளும் வெளியாகிய நிலையில், உள்ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

7.5% உள்ஒதுக்கீடுக்கு விரைந்து ஒப்புதல் தர ஆளுநர் சம்மதம்!

அந்த வழக்கு விசாரணையின் போது, ஆளுநரின் பரிசீலனையில் சட்ட மசோதா இருப்பதாகவும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை கலந்தாய்வு நடத்தப்படாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று பிற்பகல் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் ஆளுநரை சந்தித்து விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

7.5% உள்ஒதுக்கீடுக்கு விரைந்து ஒப்புதல் தர ஆளுநர் சம்மதம்!

இந்த நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு தர ஆளுநர் விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்திருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.