தமிழகத்தில் PHD படிப்பில் தரம் இல்லை- ஆளுநர் ரவி

 
rn ravi

தமிழ்நாட்டின் உயர்கல்வி சிறப்பு குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்.ஐ.ஆர்.எஃப்)- 2024ல் தரவரிசையில் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.  இதில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

rn ravi

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மாநில பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இதற்காக உழைத்த துணைவேந்தர்கள்,  பேராசிரியர்களுக்கு வாழ்த்துகள். முதல் 20 இடங்களில் தேசிய அளவில் வருவதென்பது சாதாரண விஷயம் அல்ல. நமது பல்கலைக்கழகங்களில் தனித்து செயல்படுகின்றன.  இது உடைக்கப்பட வேண்டும். தேசிய தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு பரிசு வழங்கியது போல, பல்கலைக்கழக கூட்டமும் தொடர்ந்து நடைபெறும். தேசிய அளவில் முதல் இடத்தை ஐஐடி மெட்ராஸ் பிடித்துள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடத்தை பிடித்திருப்பது நமக்கு பெருமையை தேடித்தந்துள்ளது. வேளாண்மை மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் வளர்ந்து வருகிறது. அறிவுசார் சொத்துக்களை அதிகரிப்பதில் ஐஐடி மெட்ராஸ் வீரியமாக செயல்பட்டு வருகிறது. 

கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அவை மாற்றப்பட வேண்டும். நமது பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் கல்வியானது தரத்துடன் சிறப்பானதாக இருக்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களும் நிலைத்து நிற்பது சாதாரணமல்ல. இது நமக்கு பெருமையானது. வெற்றி பெற்றவர்கள் அதனை பகிர்ந்துகொள்ளும் தருணம் இது. இது மற்றவர்களுக்கு முக்கிய உள்ளீடாக இருக்கும்.  இது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். முனைவர் பட்ட மாணவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும். நெட், ஜே.ஆர்.எஃப் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதன் மூலமாக ஜேஆர்எப் சலுகைகள் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். நெட், ஜெ.ஆர்.எஃப்  தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும். தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொது பல்கலைக்கழகங்களில் நெட், ஜெ.ஆர்.எஃப் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும். மாநிலத்தின் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் சிறந்த நிலையில் இருப்பது பாராட்ட கூடிய விஷயம்.  நமது PHD படிப்பிற்கான தரம் உயர்த்தப்பட வேண்டும். தொழிற்கல்வி அல்லாத கல்வி நிறுவனங்களில் பிஎச்டி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் . 

ravi

அறிவுசார் சொத்துரிமையில் நல்ல முன்னேற்றம் கல்வி நிறுவனஙக்ள் மேற்கொள்ள வேண்டும். நாடு முன்னேற நம் அறிவுசார் சொத்துரிமையை அதிகரிக்க வேண்டும். உலகில் 46% காப்புரிமை சீனாவிடமும், 18% அமெரிக்காவிடமும் உள்ளது. நாம் காப்பதுமை பெறுவதில் உள்ள நடைமுறைகளை சீர்செய்ய வேண்டும். நமது நாடு 2.5% காப்புரிமையை வைத்துள்ளது, இது தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தரமான முனைவர்களும் அறிவுசார் சொத்துரிமையும் மிக முக்கியம்” என பேசினார்.