"இந்தியாவின் அடையாளத்தை அழித்தவர்கள் அவர்கள்தான்- ஆளுநர் ரவி பரபரப்பு

 
rn ravi

ஆங்கிலேயர்கள் நம் கலாசாரத்தையும், சில முக்கிய இடங்களையும் தடையமின்றி அழிக்க நினைத்தனர் என தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

rn ravi

சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதி வித்தியா பவன் சார்பில் மார்கழி இசை விழாவினை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார். இந்த மார்கழி இசை விழா இன்று முதல் துவங்கி வரும் அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவில் பேசிய ஆளுநர் ரவி, “மார்கழி மாதம் ஆன்மீகத்திற்கும் இசைக்கு உகந்த மாதம், இதன் வாயிலாக நாம் இறைவனை காணமுடிகிறது.கர்நாடக இசை என்பது சர்வதேச அளவில் பாராட்டப்படக்கூடிய ஒர் இசையாகும். அத்தகைய இசை நம் நகரத்தின் அடையாளமாக உள்ளது. இங்கு அரங்கேறும் ஒவ்வொறு இசையும் மிக முக்கியமானவை. பவன்கள் தேசியத்துக்கு சிறந்து சேவையை செய்து வருகிறது.முதலாம் உலகப் போரில் ஐரோப்பிய குடியேற்றக்கார்களுக்கென கவலை கொள்வதற்கு எதுவும் இல்லை. காலனித்துவ ஆட்சியாளர்கள் நம் நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் அழிக்கவில்லை, அவர்கள் நம் கலாசாரம், பாரதத்தின் ஆன்மீகம உள்ளிட்டவற்றை அளிக்க நினைத்தனர். 

நம் பாரதத்தையும், ஆன்மீகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது. பாரதமும் ஆன்மீகமும் இருப்பதுனால் தான் சிறந்த நாடாக பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் விளங்குகிறது. ஆங்கிலேயர்கள் நம் கலாசாரத்தையும், சில முக்கிய இடங்களையும் தடையமின்றி அழிக்க நினைத்தனர். அப்படி அழித்துவிட்டால் மறைந்துவிடும் என எண்ணினர் ஆனால் அது பழிக்கவில்லை.பாரதம் என்பது ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது.நம் பாரதத்தின் அடையாளம் சனாதனம். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதலில் வந்த ஆட்சியாளர்கள் மதச்சார்பின்மையை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்போதையை ஆட்சியாளர்கள் ஐரோப்பிய மதச்சார்பின்மையை தான் கடைப்பிடித்தனர்.ஐரோப்பிய கலாசாரத்தின் எண்ணங்கள் மற்றும் அதன் வழிகளையே பிரதானமாக நினைத்தனர்.அதன் விளைவு, மாநிலங்களின் சுமையை குறைப்பதற்கு பதில் அதிகாரிகளின் பொறுப்புகள் அதிகரித்தது” என்றார்.