ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது ஏன்? - ஆளுநர் மாளிகை விளக்கம்

 
rn ravi

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதற்கான காரணம் தொடர்பாக ஆளுநர் மாளிகள் விளக்கம் அளித்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என கூறப்பட்டது. இதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார். சபாநாயகர் அப்பாவு பொன்னாடை போர்த்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார்.  

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதற்கான காரணம் தொடர்பாக ஆளுநர் மாளிகள் விளக்கம் அளித்துள்ளது. தமிழக சட்டப் பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசமைப்பில் கூறியுள்ள முதல் கடமை; தேசிய கீதத்தை பாடுவதற்கு முதலமைச்சர், சபாநாயகருக்கு ஆளுநர் வலியுறுத்தினார். தேசிய கீதம் பாட மறுக்கப்பட்டது கவலைக்குரிய விஷயமாகும். இதன் காரணமாகவே ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.