நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!தங்கம் விலை குறைந்தது

 
Q Q
தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இருந்தது. மேலும் விலை அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் அந்த விலையில் திடீரென்று சரியத் தொடங்கியது. 
ஆபாரண தங்கத்தின் விலை நேற்று(அக்.27) சவரனுக்கு ரூ.400 குறைந்தது. அதைத் தொடர்ந்து இன்று கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.11,300க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.165க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.