குட் நியூஸ்..!! இனி ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றலாம்..!

 
Q Q
டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் பயண தேதியை மாற்றும் வசதியை ரெயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி, உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணியர், பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ள முடியும். 'வேறு தேதியில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். மாற்றப்படும் தேதிக்கான ரெயில் கட்டணம் அதிகம் எனில், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்த வேண்டும். வேறு கூடுதல் கட்டணங்கள் கிடையாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.