ஆதினம் பட்டணப் பிரவேசம்: இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்.. - அமைச்சர் சொன்ன விளக்கம்..

 
sekar babu


தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.   இதனைத்தொடர்ந்து தருமபுரம் அதீன பட்டணப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.  

Stalin and eps

தமிழக சட்டப்பேரவையில் இன்று தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர்  பழம் பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதினத்தில் பட்டணப் பிரவேசம் 500 ஆண்டுகளுக்கும் மேலாக  நடைபெற்று வருவதாகவும்,  பல்லக்கு தூக்குபவர்கள் பாரம்பரியமாக ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலயே வசித்து வருபவர்கள் என்றும் குறிப்பிட்டார்.   தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் என்பது  பாரம்பரியமாக நடைபெற்று வரும் நிகழ்வு என்றும்,   பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமரவைத்து மனமுவந்து சுமந்து வருவது ஒரு ஆன்மிக நிகழ்வு என்றும்  இபிஎஸ் குறிப்பிட்டார்.

சேகர்பாபு

இதனைத்தொடர்ந்து விளக்கமளித்துப் பேசிய  அமைச்சர் சேகர்பாபு,  தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று  கூறினார். ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு  வருகிற  22-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால்,   பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தருமபுரம் ஆதினத்துடன் பேசி முதல்வர் நல்ல  முடிவெடுப்பார் எனவும், விரைவில் அதுகுறித்து அறிவிப்பார் என்றும்  கூறினார். சிலர்   பல்லக்கில் தூக்க தடை விதித்ததை அரசியலாக்க பார்க்கிறார்கள் எனவும், திமுகவை இந்துக்களுக்கு எதிரியாக சித்தரிப்பதாகக் கூறினார்.