பழனியில் 142 கிராம் தங்கம், 52 கிராம் வெள்ளி வேல் மாயம்

 
ச்

பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்க நகைகள் மற்றும் 52 கிராம் வெள்ளி வேல் மாயமாகியுள்ளன.

பழனி, சிவகிரிப்பட்டியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்க நகைகள் மற்றும் 52 கிராம் வெள்ளி வேல் மாயமானதாக தகவல் வெளியானது. புதிதாக பொறுப்பேற்ற செயல் அலுவலர் நரசின்னம் ஆய்வு செய்தபோது திருட்டு அம்பலமாகியுள்ளது. உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பழனி நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயில் இருப்பில் இருக்க வேண்டிய நகைகளும் குறைந்திருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்தர்களின் காணிக்கைகளாலும், நம்பிக்கையாலும் பாதுகாக்கப்பட வேண்டிய கோயில் சொத்துக்கள் மாயமாகியிருப்பதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது பக்தர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.