மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..

 
தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து மீண்டும் ரூ. 55 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  
 
தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், கனிசமாக விலையேற்றம் கண்டுவந்துள்ளதே நிதர்சனம். கடந்த வாரத்தில்  தொடக்கத்தில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வந்த தங்கம் விலை செப்.12( வியாழன்) என்று  சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,705க்கும், ஒரு சவரன் ரூ.53,640க்கும் விற்பனை செய்யப்பட்டது.  தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை  ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாயும் ஏற்றம் கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தங்கம் விலை

அன்றைய தினம் சென்னையில்  தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6,825க்கும் ,  ஒரு சவரன் ரூ. 54,600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 3 ரூபார் 50 காசுகள் உயர்ந்து  ஒரு கிராம் வெள்ளி ரூ. 95க்கு விற்பனையானது.  

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,880க்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் ரூ.55,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.  மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, சில்லறை விற்பனையில்  ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கு விற்கப்படுகிறது.