கோட் திரைப்பட கொண்டாட்டங்களுக்கு கண்டிஷன் போட்ட த.வெ.க. தலைமை
கோட் திரைப்பட விளம்பரத்தில் த.வெ.க. கொடி மற்றும் எந்த ஒரு அடையாள சின்னமும் விளம்பர பதாகைகளில் இருக்கக் கூடாது என தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு கட்சித் தலைமை கட்டளையிட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளில் உரிய அனுமதி பெற்று த.வெ.க. கொடியை ஏற்ற கட்சித் தலைமை அனுமதிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்ததுடன், கோட் திரைப்பட விளம்பரத்தில் த.வெ.க. கொடி மற்றும் எந்த ஒரு அடையாள சின்னமும் விளம்பர பதாகைகளில் இருக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். மேலும் கோட் திரைப்படம் திரைக்கு வரும்போது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாடுங்கள், ரசிகர்களும் தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
கொண்டாட்டங்களுக்கான பணத்தில் நலத்திட்ட உதவிகள் செய்யவும் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.