4 நாட்களில் இத்தனை கோடியா? GOAT திரைப்படம் புதிய சாதனை
முதல் நாளில் ரூ.126 கோடி வசூல் செய்த விஜய்யின் ‘தி கோட்’ 4 நாட்களில் புதிய சாதனை படைத்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம், யோகி பாபு, லைலா, சினேகா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் செப்டம்பர் 5 ம் தேதி திரைக்கு வந்தது.
Just another weekend at the box office
— Archana Kalpathi (@archanakalpathi) September 9, 2024
A total #ThalapathyTakeover 🔥🔥 @actorvijay Sir @Ags_production @vp_offl @aishkalpathi #TheGreatestOfAllTime #GOAT pic.twitter.com/Ah3659SmOo
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் தி கோட் திரைப்படம் வசூல் வேட்டையில் வாரி சுருட்டியுள்ளது. விஜயின் `GOAT' திரைப்படம் 4 நாட்களில் உலக அளவில் ரூ.288 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் கோட் திரைப்படம் 126.32 கோடி வசூலித்தது குறிப்பிடதக்கது.