GOAT... ஓப்பனிங் டே கலெக்ஷன் 126.32 கோடி!
விஜய்யின் ‘தி கோட்’ முதல் நாளில் உலக அளவில் ரூ.126 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம், யோகி பாபு, லைலா, சினேகா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்தது.
G.O.A.T at the Box office 🔥🔥 @Ags_production pic.twitter.com/s6luZxQO6C
— Archana Kalpathi (@archanakalpathi) September 6, 2024
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் தி கோட் திரைப்படம் வசூல் வேட்டையில் வாரி சுருட்டியுள்ளது. படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடியை வசூலித்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மட்டும் ரூ.43 கோடியை கோட் திரைப்படம் வசூலித்துள்ளது. தமிழகத்தில் ரூ.38.3 கோடியையும், கேரளாவில் ரூ.5.80 கோடியையும் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.