தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தவறாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல- ஜி.கே.வாசன்

 
GKvasan

தமிழக ஆளுநர் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்துப்பாடல் தவறாகப் பாடப்பட்டது ஏற்புடையதல்ல என தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் திரு.ஜி.கே. வாசன் எம்பி தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட’திராவிட நல்திருநாடு’... ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்ச்சை

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இனிவரும் காலங்களில் நிகழ்ச்சி நடத்துவோர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முறையாக, சரியாக, முழுமையாகப் பாடி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். தமிழக ஆளுநர் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது தவறாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல. தேசிய கீதம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பது போல், தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது.

மழைக்கால பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்- ஜி.கே.வாசன் - GK  Vasan urges TN Govt for agriculture issue

இனிவரும் காலங்களில் இது போன்ற பிழைகள் இல்லாதவாறு பாடுவதற்கு சரியாக, முறையாக ஒத்திகை நடத்தப்பட வேண்டும். நிகழ்ச்சி நடத்துவோர் ஒத்திகை நடத்தி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை சரியாகப் பாடி தமிழுக்கு உரிய பெருமை சேர்க்க வேண்டும். எனவே தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முறையாக, சரியாக, முழுமையாகப் பாடுவதே தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.