ஆளுநரை அவமதித்தது கண்டிக்கத்தக்கது- ஜி.கே.வாசன்
சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மண்டல மாவட்டங்களுக்கு உட்பட்ட புதிய உறுப்பினர்கள் சேர்த்ததற்கான அடையாள அட்டைகளை சென்னை மண்டல மாவட்டத் தலைவர்களிடம் வழங்கிய பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ஜி.கே.வாசன், “மக்கள் பிரச்சினை மறைக்க ஆளுநர் பிரச்சினையை திமுக ஊதி பெரிதாக்குகின்றன. அண்ணா பல்கலைக்கழகப் அவதாரத்தில் தமிழகத்தில் எந்த கட்சிக்கும் ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்ய அனுமதி கிடையாது என்பது ஜனநாயகம் கேள்விக்குறியாகிறது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை கேள்விக்குறியாக இருக்கிறது. பாலியல் பிரச்சனை என்பது தமிழகத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை கண்மூடித்தனமாக மிருகத்தனமாக தமிழகத்தில் உள்ளது. அரசாங்கத்தில் மீது காவல்துறையின் மீதும் அச்சமில்லை பயம் இல்லை என்ற கேள்விக்குறி உள்ளது.
பெண்களுக்கான பிரச்சனைகளை பல்வேறு கட்சியில் மகளிர் ஆர்ப்பாட்டம் செய்யும்போது அவர்களை மரியாதை குறைக்கும் வகையில் அரசு நடந்து கொள்வது தலைகுனிவாக இருக்கிறது” என்றார்.