தமிழக செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது - ஜி.கே.வாசன் வாழ்த்து!

 
GK Vasan

தமிழக செஸ் வீரர் குகேஷ் அவர்கள் மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கேல் ரத்னா விருதுக்கும், அர்ஜூனா விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வீரர், வீராங்கனைகள் உட்பட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். மத்திய அரசு விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு தேசிய விளையாட்டுக்கான விருதுகளை அறிவித்து விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும், ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது.  குறிப்பாக விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டும் வகையில், ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசின் விளையாட்டுத்துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சாரிய விருது  அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் சாம்பியன் #குகேஷ் #மேஜர்தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகி, சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். 

அதே போல ஹாக்கி பிரிவில் #ஹர்மான்பிரீத்சிங், பாரா தடகள பிரிவில் #பிரவீன்குமார், துப்பாக்கிசுடுதல் பிரிவில் #மனுபர்க்கர் ஆகியோரும் கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும்  தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற #துளசிமதி_முருகேசன், வெண்கல பதக்கம் வென்ற #நித்யஸ்ரீசுமதிசிவன், #மனிஷா ராமதாஸ் உட்பட நாடு முழுவதும் 34 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  கடின பயிற்சியால், தொடர் முயற்சியால், அர்ப்பணிப்பால், திறமையால் தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வான தமிழக வீரர், வீராங்கனைகள் தமிழகத்தில் விளையாட்டிற்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமளிக்கிறார்கள்.  வீரர் வீராங்கனைகளின் விளையாட்டிற்கும், வெற்றிக்கும் துணை நின்ற பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். 

தேசிய விளையாட்டு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீரர் குகேஷ், வீராங்கனைகள் துளசி மணி மற்றும் நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா உட்பட அனைவரையும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டுகிறேன். தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வாகி, தமிழகத்திற்கு புகழ் சேர்த்திருக்கும் வீரர் வீராங்கனைகள் தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டு, வெற்றி பெற்று, சாதனைகள் படைக்க, விருதுகள் பெற தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.