நடத்துநர்களுக்குப் பரிசு - போக்குவரத்துத்துறையின் அறிவிப்பு!
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் நடத்துநர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் கூகுள் பே, போன் பே போன்ற செயல்கள் மூலம் டிக்கெட்களை பயணிகள் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் Credit Card, Debit Card, QR Code மூலமாக டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. .