"மயான பணியாளர்களும் முன்களப் பணியாளர்கள் தான்" - தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

 
tn govt

கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் மயான பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள் என்று  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்காக மத்திய, மாநில அரசின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்காவல்படை பணியாளர்கள் ,சிறைச் சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கொரோனா  கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி வருவாய் துறை ஊழியர்கள் ஆகியோரை முன் களப்பணியாளர்கள் அறிவித்துள்ளது.

The-Government-of-Tamil-Nadu-has-declared-the-cemetery-staff-as-frontline-staff

தொழிற்சாலைகள் ,தனியார் நிறுவனங்கள் ,தங்கும் விடுதிகள் ,உணவகங்களில்  பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கட்டட தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள் ,அனைத்து பள்ளி ,கல்லூரி ஆசிரியர்கள், அனைத்து ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள், ஊடகத் துறை பணியாளர்கள் ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி இலவசமாக வழங்க ஆணையிடப்பட்டு  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  ஊரக வளர்ச்சி,உள்ளாட்சி, பேரூராட்சி ,நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் ,மயான பணியாளர்களின் உன்னதமான பணியை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் சலுகைகள் கிடைக்கும் வகையிலும் அவர்களை முன் களப்பணியாளர்கள் அறிவிப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

image


மத்திய அரசின் ஆணைப்படி மயானப் பணியாளர்கள் மத்திய அரசின் முன் களப்பணியாளர்கள் பட்டியலில் இல்லாவிடினும் 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும்போது தமிழ்நாடு அரசு மயான பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறியுள்ளது. 

கொரோனா  நோய்த்தொற்றின் காரணமாக உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, பணிபுரிந்து வரும் மயானப் பணியாளர்கள் இறக்கும் நேர்வுகளில் அவர்களின் குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை வாரியாக ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.