முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இலவச கொரோனா தடுப்பூசி?

 

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இலவச கொரோனா தடுப்பூசி?

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி தயாராகி விட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியும், சீரம் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியும் 3 கட்ட பரிசோதனைகளிலும் வெற்றி அடைந்து, பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டு விட்டது. அதன் படி, வரும் 16ம் தேதி முதல் நாடு முழுவதிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இலவச கொரோனா தடுப்பூசி?

மருந்துகள் அனைத்தும் இன்று காலை புனேவில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை வந்தடைந்த 5.56 லட்சம் தடுப்பூசிகள் மாநில கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவை, இன்னும் ஓரிரு நாட்களில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது.

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இலவச கொரோனா தடுப்பூசி?

இந்த நிலையில், முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும் ஜன.16ல் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தடுப்பூசியால் யாருக்கும் சிறு பக்க விளைவுகள் கூட ஏற்படாததால் ஒப்புதல் தரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.