முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை

 

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை

திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகையை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நடிகையை ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை புகார் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெங்களுரூவில் தலைமறைவாகியிருந்த அவரை கைது செய்தனர்.

இதனிடையே இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது. மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு மீது நாளை உத்தரவிடப்படும் எனக்கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.