ஏசி வசதியுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்? சட்டத்துறை அமைச்சர் விளக்கம்!

 

ஏசி வசதியுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்? சட்டத்துறை அமைச்சர் விளக்கம்!

சிறையில் ஏசி வசதியுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இருந்தாரா? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார் .

ஏசி வசதியுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்? சட்டத்துறை அமைச்சர் விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அவரது காதலி நடிகை சாந்தினி சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார். மணிகண்டன் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவரால் மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளேன். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி அவர் தற்போது தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அவர் போலீசில் புகார் அளித்தார். நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டனை சமீபத்தில் சென்னை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சென்னை சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். ஆனால் மணிகண்டன் அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். சைதாப்பேட்டை சிறையில் மணிகண்டனுக்கு சொகுசு வசதி செய்து தந்ததாகவும், அதனால் அவர் புழல் சிறைக்கு மாற்ற பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஏசி வசதியுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்? சட்டத்துறை அமைச்சர் விளக்கம்!

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் சொகுசு வசதியுடன் இருந்தார் என்பது உண்மைக்குப் புறம்பானது. சைதாப்பேட்டை கிளைச் சிறையில் ஏசி வசதியுடன் மணிகண்டன் இருக்கவில்லை. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பே புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்” என்றார்.