அதிமுக முன்னாள் எம்.பி செங்குட்டுவன் காலமானார்!

 

அதிமுக முன்னாள் எம்.பி செங்குட்டுவன் காலமானார்!

அதிமுக முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 65.வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது . அதிமுக முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் மறைவுக்கு கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் எம்.பி செங்குட்டுவன் காலமானார்!

வேலூரை சேர்ந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய நீதி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 59,393 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் என்ற பெருமை அப்போது இவருக்கு கிடைத்தது. அத்துடன் இவர் 1983ஆம் ஆண்டிலிருந்து வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வந்தார்.

அதிமுக முன்னாள் எம்.பி செங்குட்டுவன் காலமானார்!

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர், தொழில்துறை நிலைக்குழு உறுப்பினர் , சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் குழு உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.