வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டக் குழாய்கள்! குடிநீர் விநியோகம் பாதிப்பு

 
வேலூர் பாலாறு

பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டக் குழாய்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வேலூர் மாவட்டத்தில் குடிநீர் விநயோகம் பாதிக்கப்பட்டுள்ளது

வேலூர் பாலாற்றில் வெள்ளம் | Dinamalar Tamil News

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வேலூர் கோட்டம் மூலம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, பேரணாம்பட்டு, குடியாத்தம் நகராட்சிகள் மற்றும் ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடிநீர் வழங்கும் குழாய்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு இடங்களில் குடிநீர் வழங்கும் உறை கிணறுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது . இதனால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் வேலூர் மாநகராட்சி,பேர்ணாம்பட்டு, குடியாத்தம் நகராட்சிகள், பள்ளிகொண்டா, ஒடுகத் தூர் பேரூராட்சிகள், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத் தம், வேலூர், காட்பாடி, பேர்ணாம்பட்டு, கணியம் பாடி ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும் படி வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்த பிறகு குடிநீர் வழங்கும் உறைகிணறுகள் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்கள் சீரமைக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் வரை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளுர் குடிநீர் ஆதாரங்களின் மூலம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.