குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

 
Courtallam

நீர்வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் குளிக்க தடை  விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஓடைகள் , நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.  குறிப்பாக குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி,  ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Courtallam

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால்  குற்றாலத்தில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த நிலையில் வெள்ளப்பெருக்கினால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.