ராணிபேட்டையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு… அச்சத்தில் மக்கள்!

 

ராணிபேட்டையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு… அச்சத்தில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 1515 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.

ராணிபேட்டையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு… அச்சத்தில் மக்கள்!

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பொய்ப்பாக்கத்தை சேர்ந்த 61 வயது, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் ராணிபேட்டையில் கொரோனா வைரஸுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 130 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 94 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.