சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் பலி!!

 
death

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. மஞ்சள்ஓடை பட்டியில் உள்ள சோலை என்ற இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 10ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

fire accident

இந்நிலையில் ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  பட்டாசு உரிமையாளர் கருப்பசாமி , செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேர்  பலியாகிய நிலையில் காயமடைந்த 4 தொழிலாளர்களுக்குச் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

fire accident

 முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வத்திராயிருப்பு களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.