சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து- 6 பேர் பலி

 
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து- 6 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆப்பைய நாயக்கன்பட்டி பகுதியில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாகின.  தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா? என மீட்புப்படையின் தேடிவருகின்றனர்.

பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இருந்த அறையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆளை உரிமையாளர் பாலாஜி,சசிபாலன்,மேனேஜர் தாஸ் பிரகாஷ்,பேர்மென் சதீஸ்குமார் ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.