மதுரையில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து- விடுதி உரிமையாளர், காப்பாளர் மீது வழக்குப்பதிவு

 
fire

மதுரை பெண்கள் தங்கு விடுதி தீ விபத்தில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விடுதி உரிமையாளர் மற்றும் காப்பாளர்  மீது 3 பிரிவுகளின் திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Image

மதுரை தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி ஏரல் தாலுகா சார்ந்த பரிமளாசவுத்ரி (56), தற்போது வாடிப்பட்டி தாலுகா இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றார். இவரும் தூத்துக்குடி மாவட்டம் சிங்கிலிபட்டி,பேரிலோவன்பட்டி எட்டயபுரம் தாலுகா  சேர்ந்த  சரண்யா (27) மதுரை தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் இறந்தனர்


இந்த சம்பவம் குறித்து கட்ரா பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஜலபதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விடுதி வைத்து நடத்தி வந்த மதுரை டிவிஎஸ் நகரை சேர்ந்த இன்பா(64) என்பவர் மீதும், விடுதியில் மேலாளராக பணிபுரிந்த மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவர் மீதும் மூன்று பிரிவின் கீழ் திடீர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக விடுதியின் உரிமையாளர் இன்பா சேர்க்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இரண்டாவது குற்றவாளியாக உள்ள புஷ்பா தீக்காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரிவுகள்  BNS 125(a), Bns 125(b) BNS 105 பிரிவான  கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றத்திற்கான தண்டனை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதில் முதல் குற்றவாளியான இன்பாவை மட்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.