மகன் கண் முன்னே தந்தை வெட்டி கொலை!

 
murder

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள துலுக்கம்பட்டி சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). அருள் வாக்கு பூசாரியான இவருக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கிணற்றில், பாலமுருகன் தன்னுடைய 4 வயது மகனான கருப்பையாவை அழைத்துக் கொண்டு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கிணற்று உரிமையாளர் ஆதினமிளகி, குளிக்க கூடாது என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மகனை பாலமுருகன் குளிக்க வைத்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஆதினமிளகி குளிக்க கூடாது என்று கூறியும் குளித்ததால் ஆத்திரமடைந்து பாலமுருகனின் மார்பில் அரிவாளால் வெட்டியுள்ளார்.  

வெட்டிக்கொலை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் -  Oneindia Tamil

மார்பில் வெட்டுபட்ட நிலையில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து, நெஞ்சை பிடித்த படி வீட்டை நோக்கி ஓடிவந்துள்ளார். சுமார் 150 மீட்டர் தூரம் ஓடிவந்த பாலமுருகன் ஓரிடத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த 4 வயது மகன் கருப்பையா பயத்தில் அங்கிருந்து வீட்டுக்கு ஓடி, வீட்டிலிருப்பவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். 

இதனையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது பாலமுருகன் உயிரிழந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்த வளநாடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆதினமிளகியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்து உள்ளது.

படக்காட்சிகள் : கொலையுண்;ட பாலமுருகன் லைவ் போட்டோ, சம்பவம் நடந்த கிணறு, கொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சிகள், போலீசார் விசாரணை, திருச்சி எஸ்.பி, ஆய்வு, சிறுவன் கருப்பையாவிடம் எஸ்.பி சம்பவம் குறித்து கேட்பது. சிறுவன் சம்பவம் குறித்து கூறியது. தடயவியல் நிபுணர் ஆய்வு, ஆம்புலன்சில் உடல் ஏற்றிச்செல்லப்படும் காட்சிகள் உள்ளன.