சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்… காவல் நிலையங்களுக்கு டி.ஜி.பி திரிபாதி அதிரடி உத்தரவு

 

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்… காவல் நிலையங்களுக்கு டி.ஜி.பி திரிபாதி அதிரடி உத்தரவு

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணத்தைத் தொடர்ந்து விசாரணைக் கைதிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல தமிழக டி.ஜி.பி தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்… காவல் நிலையங்களுக்கு டி.ஜி.பி திரிபாதி அதிரடி உத்தரவுசாத்தான்குளத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேலாக கடையைத் திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்ட தந்தை, மகன் மர்மமான முறையில் உயிரிழந்தனர். மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து இந்த மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. காவல் அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்டது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், அரசு வேலை வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்… காவல் நிலையங்களுக்கு டி.ஜி.பி திரிபாதி அதிரடி உத்தரவுஇந்த நிலையில் தமிழக காவல் நிலையங்களுக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ” ஜாமீனில் செல்ல முடியாத பிரிவில் கைது செய்யப்படுபவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்யக்கூடாது. உதவி ஆணையர் அல்லது டி.எஸ்.பி தலைமையிலான தடுப்புக்காவல் மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியில் இருக்க வேண்டும்.

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்… காவல் நிலையங்களுக்கு டி.ஜி.பி திரிபாதி அதிரடி உத்தரவுபிணையில் செல்லக்கூடிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக பிணையில் அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுடன் எவ்வித தொடர்பும் காவலர்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. பிணையில் செல்ல முடியாத குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய குறைந்த அளவிலான காவலர்களை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போல் கைது செய்யப்பட்ட பிறகு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதோ, கூடுதலாக கொரோனா பரிசோதனை செய்யப்படவோ வேண்டும். ஒருவேளை கைது செய்யப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியானால் கைது செய்யும் பணியில் ஈடுபட்ட அனைத்து காவலர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற கைதுகளில் குறைந்த அளவிலான காவலர்களே பயன்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.