சென்னையில் தந்தை, மகள் மர்ம மரணம்! இறந்து 4 மாதங்களான கொடூரம்

 
அ

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தந்தை, மகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாமுவேல் சங்கர்(78). இவரது மகள் விந்தியா (37). கணவனை இழந்த விந்தியாவிற்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஓமியோபதி மருத்துவர் சாமுவேல் எபினேசர் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி உள்ளது. அப்போது மருத்துவரிடம் தந்தை சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மருத்துவர் எபினேசர் சென்னைக்கு அழைத்து வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். சாமுவேல் தனது மகளுடன் சிகிச்சை பார்ப்பதற்காக ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதிக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வந்துள்ளனர். அங்கு சிகிச்சை பார்த்த பிறகு, வேலூர் சென்று மீண்டும் மீண்டும் சிகிச்சைக்கு வர முடியாது என்பதால் இருவரும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த அறையில் துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருமுல்லைவாயல் போலீசார் இருவரது உடலை கைப்பற்றி தந்தை, மகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் சாமுவேல் எபினேசரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாமுவேல் மகள் விந்தியாவிற்கும் மருத்துவருக்கும் அதிக பழக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்று பேரும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நோயாளி சாமுவேலு வீட்டிற்கு வந்து மருத்துவம் பார்த்துள்ளார். ஒரு கட்டத்தில் சாமுவேல் இறந்து விடுகிறார். அப்போது விந்தியா மருத்துவரிடம் எங்களை ஏமாற்றி விட்டதாக சண்டைப் போட்டுள்ளார். அந்த சண்டையில் விந்தியா கீழே விழுந்து ரத்தக் காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது மருத்துவர் எபினேசர் வாசனை வெளியே வராமல் இருக்க மருந்தை தெளித்து வீட்டில் இருந்த ஏசியை ஆன் செய்து விட்டு காஞ்சிபுரம் சென்று விட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.