"பொங்கல் பரிசில் விடுபட்ட கரும்பு; விவசாயிகள் ஏமாற்றம்" - முதல்வருக்கு கோரிக்கை!

 
ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். அந்த வகையில் 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்  மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

ஸ்டாலின்

இதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய அனைத்தும் துணிப்பையுடன் சேர்த்து 20 பொருட்கள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இதில் பொங்கலுக்கு முக்கியமான கரும்பு மட்டும் இடம்பெறவில்லை. இது கரும்பு விவசாயிகளிடம் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

டோக்கன் வாங்காதவர்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்குமா?

இதுதொடர்பாக கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், "2016ஆம் ஆண்டு முதல் அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு இடம்பெற்று வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கரும்பு விடுபட்டுள்ளது. இது கவலையளிக்கிறது. பொங்கல் தொகுப்பை நம்பி அரசு கொள்முதல் செய்ய ஏதுவாக கரும்பு கூடுதலாக நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் முற்றிலும் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு பரிசு தொகுப்பில் கரும்பை இணைக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.