நீ போலீசா? அப்போ நாங்க யாரு?.. பெரிய சிங்கம் சூர்யானு நெனப்பு, சிக்கிய போலி போலீஸ்!
தாம்பரம் அடுத்த சங்கர் நகரில் காக்கி சிருடையில் போலி போலீஸ், பான்பரக், குட்கா சோதனை என கடைகளில் வசூல் செய்த நபரை நிஜ போலீஸ் சுற்றி வளைத்து பிடித்து சென்ற காட்சி வைரலாகி வருகிறது.
தாம்பரம் அடுத்த சங்கர் நகர் பகுதியில் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினர் என கூறி தொடர்ந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து செல்வதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் சங்கர் நகர் பகுதியில் காவல்துறையினரின் சீருடை அணிந்தவாறு ஒருவர் கடையில் கடை ஊழியரை பதினைந்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டி கொண்டிருந்த போலி போலீசை ரோந்து வகனத்தில் வந்த சங்கர் நகர் காவல் துறையினர் மடக்கி பிடித்து வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போதும் எங்க கேம்ப் அதிகாரிக்கு தகவல் அளிக்க வேண்டும் என அந்த நபர் நாடகமாடினார். ஆனாலும் அவர் போலி என தெரிந்து அதிரடியாக கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
நீ போலீசா?. அப்போ நாங்க யாரு?.. பெரிய சிங்கம் சூர்யானு நெனப்பு, சிக்கிய போலி போலீஸ்….
— Polimer News (@polimernews) December 29, 2024
கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசார் என கூறி தொடர்ந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பு.. தற்போது 15000 ரூபாய் கேட்டு கடை உரிமையாளரை மிரட்டும் போது வசமாக… pic.twitter.com/yS1Wlx1qoL
மேலும் போலி நபரிடம் காவல்துறை விசாரணை செய்ததில் கைது செய்யப்பட்டவர் முரளி வயது 40 ஸ்ரீபெரும்புதூர் வெங்காடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும் ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் காவலாளியாக இருப்பதும் தெரியவந்தது. ஏற்கனவே கடை ஒன்றில் 15 ஆயிரம் ஏமாற்றி சென்றுள்ளாதாக ஒப்பு கொண்டதின் பேரில் அவர், மீது சங்கர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். வணிகர்கள் போலீஸ் என யாராவது சோதனை செய்தால் கவனமாக இருக்க வேண்டும் என காவல் துறை சார்பில் கேட்டுக்கொண்டனர்.