பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்து சேவை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 50 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 50 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதாவது, பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் ஜன.4,5,11,12ம் தேதிகளில் கூடுதலாக 50 மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தியாகராயர் நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை பகுதிகளுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.