சிவகாசி: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- ஒருவர் காயம்

 
fire

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

fire

சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற ஞானவேல் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்ட அறைகளில் 150 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பேன்சி ரக பட்டாசுக்கு ரசாயன மூல பொருட்களை செலுத்தும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த   மரீஸ்வரன் (வயது42) என்பவர் படுகாயமடைந்தார்.

அவரை மீட்ட சக தொழிலாளர்கள் சிவாகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 20 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பட்டாசு தயாரிப்பு அறை சேதமடைந்தது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.