டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான மதுபானம்- வாந்தி, மயக்கத்தால் அவதி

 
Tasmac

திண்டுக்கல் அருகே அரசு மதுபான கடையில் காலாவதியான மதுபானம் குடித்த ஒருவர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tasmac


திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் சாலை உத்தனம்பட்டி பிரிவில் கடை எண் 3314 அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் இன்று 28.01.25 மாலை நெப்போலியன் (BRAND)  மதுபாட்டிலை  திண்டுக்கல் அருகே உள்ள வேல்வார்கோட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் வாங்கி  குடித்துள்ளார். மதுபானம் குடித்த சிறிது நேரத்தில் விஜயகுமாருக்கு திடீரென வாந்தி மயக்கம், மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக விஜயகுமாரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை அடுத்து விஜயகுமார் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தகவல் இருந்து சம்பவ இடத்துக்கு உறைந்து வந்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் மதுபான கடையில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 2023, 2024 ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக இந்த மதுபான பாட்டில்கள் மிகவும் சேதம் அடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து அரசு டாஸ்மார்க் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். இதில் காலாவதியான மதுபானங்கள் இருப்பது தெரிய வந்தது. தற்பொழுது அரசு மதுபான கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. காலாவதியான மதுபானங்கள் அரசு டாஸ்மாக் கடையில் எப்படி விற்பனைக்கு வந்தது நிறுவனத்தின் அலட்சியமா அல்லது விற்பனையாளர்களின் அலட்சியமா என்ற கேள்வி எழுகிறதுஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.