ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்- தவெகவினர் கேட்ட இடத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

 
விஜய் விஜய்

ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்ட இடத்தில் ஈரோடு எஸ்பி நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மாற்று இடம் தேட அறிவுறுத்தியுள்ளார்.

விஜய்


ஈரோட்டில் வரும் 16ஆம் தேதி விஜய் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக பெருந்துறை சாலையில் தனியாருக்கு சொந்தமான  இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தை குறிப்பிட்டு அனுமதி கோரி தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் அக்கட்சியினர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இடம் மனு அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த தனியார் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில், அந்த இடத்தில் போதிய அளவு வசதிகள் இல்லாததால் அந்த இடத்தில் அனுமதி வழங்க இயலாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.இதனால் பெருந்துறை அடுத்த சரளை என்ற இடத்தில் மாற்று இடம் தேர்வு செய்வதற்கான முயற்சியில் கே,ஏ.செங்கோட்டையன் மற்றும் தவெக.வினர் ஈடுபட்டுள்ளனர். 30 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி கேட்ட நிலையில், பவளத்தாம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த போதிய இடம் இல்லாத‌தால் மாற்று இடத்தை தேர்வு செய்ய முடிவு என கூறப்படுகிறது.