ஈரோடு இடைத்தேர்தலில்- 116 தபால்வாக்குகள் பதிவு

 
ச்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முதல் நாளில் 116 தபால்வாக்குகள் பதிவாகியுள்ளன.

Image

பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த பத்தாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 18ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.  அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றார். அடுத்தடுத்து சில சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். 8 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், ஒரு மனு நிராகரிக்கப்பட்டது.  இதனால் இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 85- வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பதிவு இன்று தொடங்கியது. தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து 256 பேர் படிவம் 12-டி வழங்கி இருந்தனர். வாக்குப்பதிவு அலுவலர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர். தபால் வாக்கு பதிவு தொடங்கிய முதல் நாளில் 256- பேரில்  116- பேரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டன. தொடர்ந்து 27-ம்  தேதி வரை தபால் வாக்குகள் பெரும் பணி நடைபெற உள்ளது. முதல் நாள் வாக்குப்பதிவை தொடர்ந்து வாக்கு பெட்டிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில்   பாதுகாப்பாக வைக்கப்பட்டன.