பேட்ஸ்மேன்கள் சொதப்பல் - 3வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி!

 
eng

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் இரண்டாவது டி29 போட்டி 25ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியிலும் இந்திய அணி போராடி த்ரில் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று இரவு ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 171 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 172 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இருந்த போதிலும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.